நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்குனர் கதிரேசன் இயக்கியுள்ள ருத்ரன் திரைப்படத்தின் இந்தி மற்றும் பிற வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை ரெவன்ஸா குளோபல் வென்சர்ஸ் என்ற நிறுவனம் பெறுவது தொடர்பாக, ருத்ரன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது.
12 கோடியே 25 லட்சம் ரூபாய் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்த ரெவன்ஸா நிறுவனம் முதல் கட்டமாக 10 கோடி ரூபாய் செலுத்தியிருந்தது. இந்நிலையில், 4 கோடியே 50 லட்சம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் எனக் கூறிய தயாரிப்பு நிறுவனம், திடீரென இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.
திட்டமிட்டபடி படத்தை வெளியிட அனுமதித்தால், தங்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என ரெவன்ஸா குளோபல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பட வெளியீட்டிற்கு தடை விதித்துள்ளது.
கதாநாயகனாக நடித்துள்ள இந்தத் திரைப்படத்தில், சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜீவி பிரகாஷ் குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ராகவா லாரன்ஸுக்கு நாயகியாக ப்ரியா பவானி சங்கர் ருத்ரன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
ராகவா லாரன்ஸ் நடித்துள்ள திகில் திரில்லர் வகை திரைப்படமான ருத்ரன் திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், இத்திரைப்படம் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையின்போது வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. திரைப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நிறைவடைய சில மாதங்கள் தேவைப்படுவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | துணிவு படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் இவரை பற்றியா?
அதன்பிறகு ஏப்ரல் 14ம் தேதி படத்தை வெளியிட பட குழு முடிவு செய்திருந்த நிலையில், தற்போது மீண்டும் மற்றுமொரு தடையை ராகவா லாரன்ஸின் திரைப்படம் ருத்ரன் எதிர்கொள்கிறது.
வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, படத்தை ஏப்ரல் 24ம் தேதி வரை வெளியிட இடைக்காலத் தடை விதித்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 24 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதனிடையில், 150 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் கல்வி செலவை ஏற்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.
I’m extremely happy to share the news of adopting 150 children and provide them with education as a new venture from rudhran audio launch. I need all your blessings #Serviceisgod pic.twitter.com/lSwns10Grs
— Raghava Lawrence (@offl_Lawrence) April 11, 2023
மேலும் படிக்க: என்னா மனுஷன்பா..!விவசாயத்தில் அசத்தும் ’பொல்லாதவன்’ கிஷோர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours