சேலம்:
சேலம் சரக போலீஸ் டி. ஐ. ஜி. ராஜேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: –
சேலம் சரகத்துக்குட்பட்ட சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் முறையாக மருத்துவ படிப்பு படிக்காமல் ஏதாவது ஒரு டாக்டரிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ளனர். பின்னர் அனுபவ அடிப்படையில் சிலர் ஆங்கில மருத்துவம் பார்த்து வருகின்றனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி போலி டாக்டர்கள் மீது போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 10 நாட்களில் மட்டும் சேலம் மாவட்டத்தில் முறையாக மருத்துவ படிப்பு படிக்காமல் மருத்துவ தொழிலில் ஈடுபட்டு வந்த சங்ககிரியை சேர்ந்த பன்னீர்செல்வம், தேவராஜன், ஓமலூரை சேர்ந்த மணிகண்டன், வாசுதேவன், ஆன்ட்ரோஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 பேரும், தர்மபுரி மாவட்டத்தில் 2 பேரும் கைதாகினர்.
சேலம் சரகத்தில் மொத்தம் 12 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் சரகத்தில் மருத்துவம் படிக்காமல் முறையற்ற வைத்தியம் பார்த்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours