Kisi Ka Bhai Kisi Ki Jaan Trailer Criticized By Ajith Fans

Estimated read time 1 min read

நடிகர் சல்மான் கான் நடித்துள்ள கிஸி கி பாய், கிஸி கி ஜான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அஜித் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. 

அஜித்தின் “வீரம்” 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள அஜித் நடிப்பில் கடந்த கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான படம் “வீரம்”. இந்த படத்தில் ஹீரோயினாக தமன்னா நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் பாலா, விதார்த், சந்தானம், அப்புக்குட்டி, அபிநயா, வித்யுலேகா ராமன்நாசர், மயில்சாமி, தம்பி ராமையா என நட்சத்திர கூட்டமே நடித்திருந்தது. வீரம் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

சூப்பர் ஹிட்டான இப்படம் காமெடி, ஆக்‌ஷன், காதல், சென்டிமெண்ட் என அனைத்து ஏரியாக்களிலும் கலந்து சொல்லப்பட்ட கதை ரசிகர்களை பெரிதாக கவர்ந்தது. மேலும் வீரம் படம் தமிழில் வெளியாகும் போதே, தெலுங்கில் வீருடோக்கடே என்ற பெயரிலும், இந்தியில் வீரம் தி பெர்மன் என்ற பெயரிலும்  டப்பிங் செய்யப்பட்டு அங்கும் ரசிகர்களை கவர்ந்தது. 

ரீமேக் பெயரில் செய்யப்பட்ட சம்பவம்

இதற்கிடையில் வீரம் படம் தெலுங்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு கட்டமராயுடு என்னும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இந்த படத்தில் பவன் கல்யாண், ஸ்ருதி ஹாசன், தருண் அரோரா, பவித்ரா லோகேஷ், நாசர், இயக்குநர் மகேந்திர்ன என பலரும் நடித்தனர். இந்த படம் தெலுங்கில் சூப்பரான வெற்றியைப் பெற்றது. 

இதனைத் தொடர்ந்து வீரம் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. சல்மான் கான் ஹீரோவாக நடிக்கும் இப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் கிஸி கி பாய், கிஸி கி ஜான்  படத்தில் சித்தார்த் நிகம், க்ரீத்தி சனோன், ஜெகபதி பாபு, மாளவிகா ஷர்மா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.  ஃபர்ஹத் சம்ஜி இயக்கியுள்ள இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் , ஹிமேஷ் ரேஷ்மியா , தேவி ஸ்ரீ பிரசாத் , பாயல் தேவ் , அமல் மல்லிக் ஆகிய 5 இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ளனர்.

இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. வீரம் படத்தின் அடிப்படை கதையை மட்டும் எடுத்துக் கொண்டு ஆங்காங்கே சில காட்சிகளையும் உருவி கிஸி கி பாய், கிஸி கி ஜான்  படம் எடுக்கப்பட்டுள்ளது. வீரம் படத்தில் தமன்னா அப்பாவாக நாசர் நடித்திருப்பார். இந்த படத்தின் பூஜா ஹெக்டேவின் அப்பா கேரக்டர் அண்ணனாக மாற்றப்பட்டு அதில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடித்துள்ளார். 

அதேபோல் வீரம் படத்தின் இடைவேளை காட்சியில் ரயில் சண்டை காட்சி இடம் பெறும். இக்காட்சியில் அஜித் டூப் போடாமல் நடித்து பாராட்டைப் பெற்றார். அது கிஸி கி பாய், கிஸி கி ஜான் படத்தில் மெட்ரோ ரயில் காட்சியாக மாற்றப்பட்டுள்ளது. இதனை சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். 

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours