நடிகர் தாடி பாலாஜிக்கும் அவர் மனைவி நித்யாவுக்கும் இடையிலான பஞ்சாயத்து ஊரறிந்ததே. இவர்களின் குடும்பப் பிரச்னை நீதிமன்றம் வரை வந்துவிட்ட போதும், சட்டப்படி இன்னும் விவாகரத்து வழங்கப்படவில்லை. இருந்தும் கடந்த சில வருடங்களாக இருவரும் தனித்தனியேதான் வசித்து வருகின்றனர். மகள் போஷிகா நித்யாவுடன் வளர்ந்துவருகிறார். அவ்வப்போது இருவருக்குமிடையில் சண்டை பெரிதாவதும், பிறகு தணிவதுமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் எட்டாம் தேதி நித்யாவின் பிறந்த நாள். ஏழாம் தேதி நள்ளிரவு பன்னிரண்டு மணி ஆனதும், ‘ஹேப்பி பர்த் டே பொண்டாட்டி’ என தன் டி.பி-யில் வைத்த பாலாஜி, மனைவி நித்யா மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படங்களையும் ஸ்டேட்டஸ் வைத்து நித்யாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். கடந்த சில வருடங்களாகவே இவர்கள் இருவருக்குமிடையில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் இல்லாத நிலையில், பாலாஜியின் இந்தத் திடீர் வாழ்த்து இருவரின் நண்பர்கள் வட்டாரத்திலும் ஆச்சரியத்தை உண்டாக்கியது.
‘பாலாஜி மனம் மாறியுள்ளார்’ என்கிற ரீதியில் அவர்கள் பேசிவந்த நிலையில் சில மணி நேரத்தில் அந்த ஸ்டேட்டஸை நீக்கினார் பாலாஜி. ஆனால் டி.பி-யை மாற்றவில்லை.
‘என்ன நடந்தது’ என அறிய பாலாஜியைத் தொடர்பு கொண்டோம்.
“பொண்டாட்டிக்கு வாழ்த்து சொல்றது தப்பாண்ணே” என்றவரிடம், வாழ்த்துக்கு நித்யாவின் ரியாக்ஷன் என்ன எனக் கேட்டதும், “தேங்க்ஸ் சொன்னாங்க!” என்றார்.
ஸ்டேட்டஸை உடனே நீக்கியது குறித்துக் கேட்டதும், “ஷூட்டிங்கில் இருக்கிறேன், பிறகு பேசுகிறேன்” எனச் சொல்லி இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
நித்யாவிடமும் பேசினோம்.
+ There are no comments
Add yours