2015 முதல் 2022 வரை குறைந்த செலவில் வெளியான தரமான தமிழ்ப் படங்களுக்கு மானியம்: தமிழக அரசு | Subsidy for low budget quality Tamil films from 2015 to 2022: Govt of TN

Estimated read time 1 min read

சென்னை: 2015 முதல் 2022-ஆம் ஆண்டுகளில் குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ்த் திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்தி மற்றும் விளம்பரத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தி மற்றும் விளம்பரத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சமூகப் பொறுப்பும், சமுதாய விழிப்புணர்ச்சியுமாக திரைப்படங்களைத் தரமாகவும், சிறிய முதலீட்டிலும் தயாரித்து வெளியிடுவோரை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்த் திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்கும் திட்டத்தினை, தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவின் வாயிலாக, குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்படும் தரமான தமிழ்த் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு திரைப்படத்திற்கும் இத்திட்டத்தின் வாயிலாக ரூ.7 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.

2015 முதல் 2022 ஆம் ஆண்டுகளில் குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ்த் திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours