“வெற்றிமாறன் மனித வடிவில் இருக்கும் மிருகம்; அவரின் உழைப்பு பாராட்டத்தக்கது” – சீமான் | seeman talk about viduthalai movie and director vetrimaaran

Estimated read time 1 min read

சென்னை: “இயக்குநர் வெற்றிமாறன் மனித வடிவில் இருக்கும் மிருகம் அந்த வெறியில் அவர் படம் எடுக்கிறார். அது பாராட்டத்தக்கது” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அவ்வப்போது ஆகச்சிறந்த படைப்பாளிகள் தமிழ் சினிமாவில் நம்மிலிருந்து வந்துள்ளார்கள்.

பாலசந்தர், மகேந்திரன், பாரதிராஜா எனப் பலரும் வந்துள்ளனர். அப்படியான படைப்பாளிகள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் வெற்றிமாறன், ராம் உள்ளிட்டோர் சிறந்த படங்களை தந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதனை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. ‘விடுதலை’ போன்ற படத்தை எடுப்பதற்கு கடும் உழைப்பை கொட்ட வேண்டியிருக்கிறது. காட்டுக்குள் பயணிச்சு மலையில் ஏறி கடுமையான உழைப்பைக் கொடுத்துள்ளார். அவர் மனித வடிவில் இருக்கும் மிருகம் அந்த வெறியில் அவர் படம் எடுக்கிறார். அது பாராட்டத்தக்கது” என தெரிவித்துள்ளார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours