* சமீபத்தில் வெளியான ‘பஹிரா’ அவரது 55வது படமாகும். அடுத்து `ப்ளாஷ் பேக்’, `வுஃல்ப்’, ஷக்திசிதம்பரத்தின் படம் என பல படங்களில் நடிகராக நடிக்கிறார்.
* ஹீரோவாக பிஸியாக ஓடிக்கொண்டிருந்தாலும், நடன இயக்குநராக வாய்ப்புகள் தேடி வந்தால், மறுக்காமல் பணியாற்றுவார். எந்தப் பாடலாக இருந்தாலும் அதிகபட்சம், மூன்று நாட்களுக்குள் நடனம் அமைத்துக் கொடுத்துவிடுவது, அவரது ஸ்டைல்.
* நடன இயக்குநராகக் கலக்கிக் கொண்டிருக்கும் போதே, நடிகரானார். அதன்பிறகு அவருக்கு டைரக்ஷன் மீது ஆசை வந்தது. ‘பொறுப்பு எடுத்துக்கறது, வொர்க் டென்ஷன் எல்லாம் அவருக்குப் பிடிக்கும்’ என்பதாலேயே இயக்குநர் ஆனார் அவர்.
* மும்பையில் உள்ள Lonavala wax மியூசியத்தில் இவரது மெழுகு சிலை உள்ளது.
* தாடியோடு இருப்பதை அதிகம் விரும்புவார். அதற்கு அவர் சொல்லும் காரணம்.. ‘`அப்பா தாடியோட இருப்பார். என்னோட சின்ன வயசிலேயே மாஸ்டர் ஆகிட்டேன். கொஞ்சம் தாடி இருந்தால் வயசு அதிகம்னு மதிப்பாங்கன்னு நினைச்சு, அப்பவே தாடி வச்சுக்க ஆரம்பிச்சிட்டேன். ‘உனக்கு தாடி நல்லா இருக்குடா… வைடா’ன்னு அம்மாவும் சொன்னாங்க. வச்சிட்டேன்.’’ என்பார்.
* சிரஞ்சீவியின் மீது மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் கொண்டவர் பிரபுதேவா. காரணம், சிரஞ்சீவியின் படத்தில் இருந்துதான் தன் நடன இயக்குநர் பயணத்தைத் தொடங்கினார். அந்த நட்பு ‘காட்ஃபாதர்’ படம் வரை நீடித்திருக்கிறது. அதைப் போல, சிரஞ்சீவிக்கும் இவரது உழைப்பு மிகவும் பிடிக்கும்.
* எப்போதும் தன்னடக்கமாக புன்னகைப்பதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. முதன் முதலாக அவர் தேசிய விருது வாங்கியதும், அதை தனது பரதநாட்டிய மாஸ்டர் தர்மராஜிடம் சொல்லி மகிழ்ந்திருக்கிறார். அவரோ, ‘விருதுகளெல்லாம் வரும் போகும்.. நீ உன் வேலையை சரியாகச் செய்’ என்று கூறியிருக்கிறார். அன்றிலிருந்து பெரும் மகிழ்ச்சி அடைவதில்லை. எல்லாவற்றையும் சிறு புன்னகையுடன் கடந்து போய்விடுவார்.
+ There are no comments
Add yours