4/10/2023 12:39:17 AM
புதுடெல்லி: ஈஸ்டர் பண்டிகை பற்றி வாழ்த்து தெரிவித்த கைதி சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு உருக்கமான காதல் கடிதம் ஒன்று எழுதிஅனுப்பியுள்ளார். ரூ. 200 கோடி பண மோசடி வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகர், தற்போது டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்பட பல பிரபலங்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கைதி சுகேஷ் சந்திரசேகர் ஜாக்குலின் பெர்ணான்டசுக்கு எழுதிய ஒரு கடிதம் வெளியாகியுள்ளது. அந்தக் கடிதத்தில், ‘என் செல்லக்குழந்தை ஜாக்கு லின். குட்டி முயலே… எனது பேபியே… உனக்கு எனது இனிய ஈஸ்டர் தின நல்வாழ்த்துகள். உனக்கு
மிகவும் பிடித்த பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகையும் ஒன்று என தெரியும். இந்த பூமியில் உன்னை விடவும் அழகி யாருமே கிடையாது. ஐ லவ் யூ பேபி. இந்த நேரமும் கடந்து போகும். மீண்டும் நல்ல நாட்கள் வரும். ஒவ்வொரு கணமும் உன்னை மிஸ் செய்கிறேன். ஒவ்வொரு கணமும் நீயும் என்னை மிஸ் செய்வாய் என்று எனக்கு தெரியும். அடுத்த ஆண்டு ஈஸ்டர் தினம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்’ என்று எழுதியுள்ளார்.
+ There are no comments
Add yours