இந்நிலையில் ஜெர்மி ரென்னருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கிறிஸ்டோபர் வின்சென்ட் இந்த விபத்து குறித்துப் பேசியிருக்கிறார்.
“ஜெர்மி ரென்னர் நூலிழையில் உயிர் தப்பித்திருக்கிறார். அது அவருடைய அதிர்ஷ்டம். கொஞ்சம் விட்டிருந்தால் அவரது உடலில் உள்ள முக்கிய நரம்புகளும், உறுப்புகளும் பாதிக்கப்பட்டிருக்கும். ஜெர்மி ரென்னர் முழுமையாகக் குணமடைய வேண்டும். குணமடைந்த பின்னர் அவருக்கு மனரீதியாகவும் சிகிச்சைகள் தேவைப்படலாம். வலுவாகவும் சிறப்பாகவும் திரும்பி வர வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்” எனத் தெரிவித்திருக்கிறார்.
சிகிச்சை முடிந்து முதன்முதலாக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ஜெர்மி ரென்னர், “நான் தனியாக இருந்திருந்தால் அது ஒரு பயங்கரமான ஒரு மரண வழியாக இருந்திருக்கும். நிச்சயமாக நான் இறந்திருப்பேன். ஆனால் என்னுடன் எனது ‘Nephew’ அலெக்ஸ் இருந்தான். இந்த விபத்தில் எனக்கு 30க்கும் மேற்பட்ட எலும்புகள் உடைந்தன. இருப்பினும் நான் உயிர் பிழைப்பதையே விரும்பினேன்” என்று கூறினார்.
தொடர்ந்து, சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே பேசிய ஜெர்மி, “மருத்துவமனைக்குச் சென்றபோது நான் உயிர் பிழைக்க மாட்டேன் என்றுதான் நினைத்தேன். உடனே என்னுடைய மொபைலில் என் குடும்பத்தினருக்காக என்னுடைய கடைசி வார்த்தைகளை டைப் செய்துகொண்டிருந்தேன்” என்றவர், “இந்த விபத்தில் சிக்கியது தொடர்பாக எனக்கு மனவருத்தம் எதுவுமில்லை. அலெக்ஸைக் காப்பாற்ற மீண்டும்கூட இதை நான் செய்யத் தயாராக இருக்கிறேன். நான் உயிர் பிழைப்பேன் என்பதையே தேர்வு செய்திருக்கிறேன். இந்த விபத்து என்னைக் கொல்லப்போவதில்லை. நோ வே!” என்று நம்பிக்கையுடன் பேசியிருக்கிறார்.
சீக்கிரமே மீண்டு வாருங்கள் அவெஞ்சர்!
+ There are no comments
Add yours