Feeling defenseless: Priyadarshan – Dinakaran Cinema News

Estimated read time 1 min read

பாதுகாப்பு இல்லாதவன் போல் உணர்கிறேன்: பிரியதர்ஷன்

4/10/2023 12:43:47 AM

திருவனந்தபுரம்: கடந்த 45 ஆண்டுகளில் பல்வேறு மொழிகளில் 75க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருப்பவர், பிரியதர்ஷன். மலையாளத்தில் நிறைய படங் கள் இயக்கியுள்ளார். தற்போது அவரது இயக்கத்தில் வெளியான மலையாளப் படம், ‘கொரோனா பேப்பர்ஸ்’. இது கிரைம் திரில்லர் கதையுடன் உருவாகி யுள்ளது. இந்நிலையில், ‘இனி காமெடி படங்களையே இயக்க மாட்டேன்’ என்று தெரிவித்து இருக்கிறார், பிரியதர்ஷன். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘இனி நான் காமெடி படங்களை இயக்கக்கூடாது என்று உறுதியாக முடிவு செய்துள்ளேன். காரணம், முன்பு நான் இயக்கிய படங்களில், கதைக்கு பக்கபலமாக இருந்த நெடுமுடி வேணு, திலகன், இன்னசென்ட், குதிரை வட்டம் பப்பு போன்ற முக்கியமான நடிகர்கள் இன்று உயிருடன் இல்லை. எனவே, சினிமாவில் நான் பாதுகாப்பு இல்லாதவன் போல் உணர்கிறேன். இன்றைய இளம் தலைமுறையினருக்கு காமெடிகளை கடத்துவதில் அதிகமான சிரமம் இருக்கிறது. எனவே, வெவ்வேறு ஜானரில் படம் இயக்குவதாக முடிவு செய்திருக்கிறேன்’ என்றார். அவரது முடிவை நெட்டிசன்களும், ரசிகர்களும் கமென்ட் செய்து வரவேற்றுள்ளனர்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours