ப்ரீத்தி ஜிந்தா வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றுக்கொண்டுள்ளார். அக்குழந்தைகளையும் இம்முறை ப்ரீத்தி ஜிந்தா இந்தியா அழைத்து வந்துள்ளார். இந்தியாவில் நடந்த இரண்டு சம்பவங்கள் தன்னை மிகவும் பாதித்துவிட்டதாக ப்ரீத்தி ஜிந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விமான நிலையத்திற்கு புறப்படுவதற்காக காரில் ஏறி கதவை மூட முயன்றேன். அந்நேரம் வீல் சேரில் வந்த ஒருவர் கதவை தட்டி பணம் கேட்டார். நான் சாரி என்று சொன்னேன். அப்படி இருந்தும் அந்த நபர் என்னை விடவில்லை. எனது கார் புறப்பட்ட பிறகும் வீல் சேரில் என்னை பின் தொடர்ந்தார். இந்த நபர் பணத்திற்காக என்னை பல ஆண்டுகளாக துன்புறுத்தி வருகிறார். என்னால் முடியும் போது கொடுத்திருக்கிறேன். இந்த முறை என்னிடம் பணம் கேட்ட போது பணம் இல்லை.
என்னிடம் கிரெடிட் கார்டு மட்டும்தான் இருந்தது. என்னுடன் இருந்த பெண் தனது பர்சிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார்.
+ There are no comments
Add yours