“வெற்றிமாறனின் ரசிகன் நான். ‘விடுதலை’ மிகவும் பிடித்திருந்தது” – தினேஷ் கார்த்திக்

Estimated read time 1 min read

“இயக்குநர் வெற்றிமாறனின் மிகப் பெரிய ரசிகன் நான்; ‘விடுதலை பாகம் 1’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்துள்ள ‘விடுதலை பாகம் 1’ திரைப்படம் கடந்த மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டினார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “‘விடுதலை’ இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம். சூரியின் நடிப்பு – பிரமிப்பு. இளையராஜா – இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் – தமிழ் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” என பாராட்டியிருந்தார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours