சென்ற ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக விஜய்யின் `பீஸ்ட்’, யஷ்ஷின் `கே.ஜி.எஃப் – 2′ என டாப் ஹீரோக்களின் படங்கள் களைகட்டின. இந்த ஏப்ரல் 14லில் தமிழில் என்னென்ன படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து இங்கே பார்ப்போம்.
ரஜினியின் ‘ஜெயிலர்’, கமலின் ‘இந்தியன் 2’, விஜய்யின் ‘லியோ’ உட்படப் பெரிய கதாநாயகர்களின் படங்கள், மும்முரமான படப்பிடிப்பில் இருப்பதால், அவை எதுவும் இந்தத் தமிழ்ப் புத்தாண்டுக்கு இல்லை. அதே சமயம், ராகவலா லாரன்ஸின் ‘ருத்ரன்’, சமந்தாவின் ‘சாகுந்தலம்’, ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’, விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’, யோகி பாபுவின் ‘யானைமுகத்தான்’, அருள்நிதியின் ‘திருவின் குரல்’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு வரிசைகட்டி நிற்கின்றன. அவை பற்றிய ஒரு பார்வை இனி…
ருத்ரன்

தனுஷின் ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘நய்யாண்டி‘, அருள்நிதியின் ‘டைரி’ உட்படப் பல படங்களைத் தயாரித்த எஸ்.கதிரேசன், ராகவா லாரன்ஸை வைத்து இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம் ‘ருத்ரன்’. இதில் சரத்குமார், பிரியா பவானிசங்கர், நாசர், பூர்ணிமா பாக்யராஜ் எனப் பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசைமைத்திருக்கிறார்.
சாகுந்தலம்

சகுந்தலையாக சமந்தா நடித்திருக்கும் படம் ‘சாகுந்தலம்’. அவர் தவிர துஷ்யந்தனாக தேவ் மோகன், துருவ மகரிஷியாக மோகன் பாபு, அனுசுயாவாக அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், கௌதமி, மதுபாலா எனப் பலர் நடித்திருக்கிறார்கள். தெலுங்கு மற்றும் தமிழில் இப்படம் வெளியாகிறது. மகேஷ் பாபுவை வைத்து ‘ஒக்கடு’, அனுஷ்காவை வைத்து ‘ருத்ரமாதேவி’ உட்பட தெலுங்கில் பல படங்களை இயக்கிய குணசேகரின் படமிது.
சொப்பன சுந்தரி
ஐஸ்வர்யா ராஜேஷின் ஹீரோயின் சென்ட்ரிக் பட வரிசையில் மற்றொரு தயாரிப்பு ‘சொப்பன சுந்தரி’. டார்க் ஹூயூமர் ஜானர் படமிது. வெங்கட் பிரபு, வைபவை வைத்து ‘லாக்கப்’பைக் கொடுத்த எஸ்.ஜி.சார்லஸ், இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் லட்சுமிப்ரியா, சுனில் ரெட்டி, ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், மைம்கோபி, பிஜான், சாரா என நிறைய பேர் நடித்திருக்கிறார்கள்.
திருவின் குரல்

அருள்நிதி பாரதிராஜாவுடன் இணைந்து நடித்திருக்கும் படம் ‘திருவின் குரல்’. முழுக்க முழுக்க அரசு மருத்தவமனையின் பின்னணியில் நடக்கும் கதை இது. அறிமுக இயக்குநர் ஹரிஷ் பிரபு, இதற்கு முன்னர் ‘பண்ணையாரும் பத்மினி’ அருண்குமார், ‘மைக்கேல்’ ரஞ்சித் ஜெயக்கொடி ஆகியோரிடம் பணியாற்றியவர்.
தமிழரசன்

விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடித்துள்ள படம் ‘தமிழரன்’. ‘ஜெயம்’ ரவி நடித்த ‘தாஸ்’ படத்தை இயக்கிய பாபு யோகேஸ்வரன், இதை இயக்கியிருக்கிறார். இளையராஜா இசையில் எஸ்.பி.பி. கடைசியாக இந்தப் படத்தில்தான் பாடினார் என்கிறார்கள்.
யானை முகத்தான்

மலையாள இயக்குநர் ரெஜிஷ் மிதிலா, தமிழில் இயக்குநராக அறிமுகாகும் படம் ‘யானை முகத்தான்’. யோகி பாபு கதை நாயகன். ஊர்வசி, கருணாகரன், ரமேஷ்திலக், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, குளப்புள்ளி லீலா ( ‘மருது’ பாட்டி ), நாகவிஷால் எனப் பலர் நடித்திருக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி ராஜஸ்தான் வரை நடந்து முடிந்துள்ளது.

இவை தவிர (மாஸ்டர்) மகேந்திரன் நடித்துள்ள ‘ரிப்பப்பரி’ படமும் ஏப்ரல் 14 அன்று திரைக்கு வருகிறது.
இவற்றில் உங்களின் ஃபேவரைட் எது என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்.
+ There are no comments
Add yours