4/6/2023 4:31:48 AM
புதுடெல்லி: ரூ200 கோடி பணமோசடி வழக்கில் கைதாகி டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் மூலம் ஆதாயம் அடைந்த குற்றச்சாட்டின் கீழ், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட நடிகைகள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இவ்வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அமலாக்கத்துறை சார்பில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
அதையடுத்து அவர் நேற்று காலை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் தனது வக்கீல்களுடன் ஆஜரானார். அப்போது அவர் மீது தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றம் விசாரணை நடத்தியது.
+ There are no comments
Add yours