4/6/2023 4:28:53 AM
மும்பை: சல்மான் கான் படத்தில் ஒரு பாடலுக்கு ராம்சரண் டான்ஸ் ஆடியிருக்கிறார். அஜித், தமன்னா நடித்த படம் வீரம். இந்த படத்தை இந்தியில் கிஸி கா பாய் கிஸி கி ஜான் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள். அஜித் வேடத்தில் சல்மான் கான், தமன்னா வேடத்தில் பூஜா ஹெக்டே நடிக்கிறார்கள். தமிழில் தமன்னாவின் அப்பாவாக நாசர் நடித்திருந்தார். அந்த வேடத்தை அண்ணன் கேரக்டராக மாற்றி அதில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடித்துள்ளார். மகாராஷ்டிராவிலிருந்து ஐதராபாத்துக்கு சல்மான் கான் வருவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில் நடிக்க ராம்சரணிடம் சல்மான் கான் பேசினார்.
சிரஞ்சீவி நடித்த காட்பாதர் தெலுங்கு படத்தில் சல்மான் கான் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். அந்த நட்பின் காரணமாக, சல்மான் கான் கேட்டதும் இதில் நடிக்க ராம்சரண் ஒப்புக்கொண்டார். இதையடுத்து மும்பையிலுள்ள யஷ்ராஜ் ஸ்டுடியோவில் என்டம்மா எனத் தொடங்கும் பாடல் காட்சியில் சல்மான் கான், பூஜா ஹெக்டே, வெங்கடேஷ் ஆகியோருடன் ராம்சரணும் நடித்தார். இந்த பாடல் காட்சியில் சட்டை, வேட்டி கட்டி 4 பேரும் ஆடிப்பாடும் பாடலை டான்ஸ் மாஸ்டர் அஹமத் கான் வடிவமைத்தார். இந்த படம் வரும் ரம்ஜான் பண்டிகைக்கு ரிலீசாகிறது.
+ There are no comments
Add yours