4/6/2023 4:29:48 AM
துபாய்: ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூர்ணா. ‘தகராறு’, ‘காப்பான்’, ‘சவரக்கத்தி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். திடீரென துபாய் தொழில் அதிபர் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். கர்ப்பமாக இருந்த அவருக்கு நேற்றுமுன்தினம் துபாய் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தையின் புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, ‘நாங்கள் ஒரு ஆண் குழந்தைக்கு பெற்றோர் ஆகியுள்ளோம்’ என்றும் எங்களுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தனது குழந்தையின் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் பூர்ணாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
+ There are no comments
Add yours