Actress Khushbu hospitalized suddenly with these severe new symptoms | இந்த அபாய அறிகுறிகளுடன் நடிகை குஷ்பூ மருத்துவமனையில் அனுமதி

Estimated read time 1 min read

தர்மத்தின் தலைவன் படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் குஷ்பூ. முதல் படத்திலேயே தனது அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை ஈர்த்த குஷ்பூ தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். ரஜினி, கமல் என 80களின் முன்னணி நட்சத்திரங்களுடன் பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்.

மும்பையை பூர்வீகமாகக் கொண்டாலும் குஷ்பூ தமிழில் நடிக்க ஆரம்பித்த பிறகு தமிழை முறையாக கற்றுகொண்டவர். தனது சொந்த குரலில் வெகு விரைவிலேயே டப்பிங்கும் பேச ஆரம்பித்துவிட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ரவுண்டு கட்டி வலம் வந்தவர் குஷ்பூ. தமிழ்நாட்டில் குஷ்பூ இட்லி எனும் அளவுக்கு சென்சேஷனல் ஆனவர்.

மேலும் படிக்க | குக் வித் கோமாளியில் திடீர் டுவிஸ்ட்…இந்த வாரம் எலிமினேட் ஆகும் போட்டியாளர்

தற்போது அரசியல்வாதியாக இருந்தாலும் குஷ்பூ முன்னணி கதாநாயகியாக இருந்தபோது தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்தவர். கமலுடன் இணைந்து மைக்கேல் மதன காமராஜன், வெற்றிவிழா, சிங்காரவேலன் என மெகா ஹிட்டுகளையும், ரஜினியுடன் இணைந்து அண்ணாமலை, மன்னன், பாண்டியன் என ப்ளாக்பஸ்டர்களையும் கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது தேசிய மகளிர் ஆணையக் குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பூ உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் மற்றும் உடல் வலி காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குஷ்பூவின் இந்த பதிவை அடுத்து அவரது ரசிகர்கள் அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | வெற்றி விழா கொண்டாடிய விடுதலை படக்குழு… 6ஆம் நாள் வசூல் நிலவரம் என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours