Pushpa 2 Glimpse Where Is Pushpa Full Video Released Allu Arjun Rashmika – Watch

Estimated read time 1 min read

கடந்த 2021ஆம் ஆண்டு வெளியாகி, சூப்பர் ஹிட் அடித்த படம் புஷ்பா: தி ரைஸ். இதனை, பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார். செம்மரக்கடத்தலை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில், பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகாவும் நடித்திருந்தனர்.

அவர்கள் மட்டுமன்றி, ஃபகத் ஃபாசில், தனஞ்செய், அஜய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இதில் நடித்திருந்தனர். நடிகை சமந்தா, “ஊ அண்டாவா..” பாடலுக்கு நடனமாடியிருந்தார். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டிற்கு முன்பு வெளியாகியிருந்த இப்படத்தின் தாக்கம், இப்போது வரை நீடித்து வருகிறது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புஷ்பா 2 டீசர்:

புஷ்பா படத்தின் நாயகன் அல்லு அர்ஜுனிற்கு நாளை பிறந்தநாள். இதையொட்டி, படத்தின் கான்செப்ட் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்ப்பினை பெற்று வருகிறது. 

இந்த படத்தில், திருப்பதி சிறையிலிருந்து தப்பியோடும் புஷ்பாவை காவல் துறையினர் கொன்று விட்டதாக செய்தி பரவுகிறது, இதனால் ஊர் முழுவதும் கலவரம் வெடிக்கிறது. புஷ்பா சிறையில் அடைக்கப்பட்டது எதற்காக? அவரை உண்மையிலேயே காவல் துறையினர் கொன்று விட்டனரா என்ற கேள்விகளை இந்த டீசர் எழுப்பியுள்ளது. ”காட்டு விலங்குகள் இரண்டடி பின்னால் எடுத்து வைத்தால் புலி வந்துவிட்டது என்று அர்த்தம்..அந்த புலியே இரண்டடி பின்னால் எடுத்து வைத்தால் புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம்..” என்ற பஞ்ச் வசனத்துடன் முடிகிறது, இன்று வெளியாகியுள்ள இந்த டீசர். 

புஷ்பா2: தி ரூல்:

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியிடப்படவுள்ள புஷ்பா2 திரைப்படம் பான் இந்தியா அளவில் உருவாகியுள்ளது. இந்த படத்தில், முதல் பாகத்தில் இடம் பெற்றிருந்த நட்சத்திரங்கள் அப்படியே தொடருகின்றனர். முந்தைய படத்தில் கடைசி நிமிட காவல் அதிகாரியாக வந்து மாஸ் காட்டிய மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலிற்கு, இந்த இரண்டாம் பாகத்தில் முக்கியத்துவம் கொடுத்து கதையமைக்கப்பட்டுள்ளது. 

முதல் பாகத்தில், சந்தன மரங்களை பிறருக்காக கடத்தி வந்த புஷ்பா இந்த பாகத்தில் அந்த கடத்திலிலேயே பெரிய ஆளாக மாறுவதுதான் கதை. இவருக்கு வில்லனாக வரும் பல்பீர்சிங்தான் ஃபகத் ஃபாசில். ஆக மொத்தத்தில், ரசிகர்கள் எதிர்பார்க்கும் சண்டை, மசாலா, காதல் என அனைத்தும் கலந்து கலவையாக புஷ்பா:தி ரைஸ் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

“புஷ்பா எங்கே?”

நடிகை ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5ஆம் தேதி புஷ்பா2 படம் குறித்த அப்டேட் வெளியானது. இதையடுத்து, புஷ்பா படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ்,  Where is Pushpa? என்ற பெயரில் ஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தது.


இந்த பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்து, #Whereispushpa என்ற ஹேஷ்டேக்தான் ட்ரெண்டிங்கில் இருந்தது. புஷ்பா எங்கிருக்கிறான் என்பதை இன்று வெளியிடவுள்ளதாகவும் படக்குழு தெரிவித்திருந்தது. இதையடுத்தது, புஷ்பா 2 படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. 


இது புஷ்பாவின் ரூல்!

செம்மரக்கடத்தலிற்கு துணை போன நாயகன், அந்த தொழிலிலேயே பெரிய ‘டான்’ ஆவதுதான் இப்படத்தின் கதை . 3 நிமிட நீள டீசரில் 15 நொடிகளுக்கும் குறைவாகத்தான் அல்லு அர்ஜுனை பார்க்க முடிந்தது. ஆனால் அந்த சில நொடிகளிலும் மாஸாக தோற்றமளித்த அல்லு அர்ஜுனை பார்த்து அவரது ரசிகர்கள் சில்லரைகளை சிதறவிட்டு வருகின்றனர்.

மேலும், இதில் புஷ்பாவிற்கு வயதானது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனால், இக்கதையில் புஷ்பாவுடைய அப்பாவின் கதை தொடருமோ என பலர் கேளியெழுப்பி வருகின்றனர். மேலும், டீசரின் முடிவில் அல்லு அர்ஜுன் பேசும் “இது புஷ்பாவின் ரூலு..” எனும் காட்சியையும் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். 

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours