Priyanka Chopra: “எங்கள் வீட்டுப் பெண்கள் இப்படிச் செய்ய மாட்டார்கள் என்றனர். ஆனால்…”- மது சோப்ரா | Priyanka Chopra’s mom Madhu Chopra talks about the Miss India selection

Estimated read time 1 min read

இதுதொடர்பாகப் பேசிய பிரியங்கா சோப்ராவின் அம்மா மது சோப்ரா, “பிரியங்கா மிஸ் இந்தியாப் போட்டியில் கலந்துகொள்ள இருந்தபோது எங்கள் வீட்டில் ஒரு பெரிய விவாதமே நடந்தது. பிரியங்கா நன்றாகப் படிக்கும்போது அவள் மனதில் ஏன் இதுபோன்ற கவனச்சிதறல்களை ஏற்படுத்துகிறீர்கள் என்று எல்லோரும் என்னிடம் கேள்வி கேட்டனர். முதலில் பிரியங்காவுமே மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொள்ளவதற்குத்  தயங்கினாள். ’அம்மா, என்னால் இதைச் செய்ய முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை’ என்று கூறினாள். ‘மிஸ் இந்தியா’ போன்ற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

இதுபோன்ற ஒரு வாய்ப்பு மீண்டும் உனக்கு வராமல்கூடப் போகலாம் என்று நான் அவளுக்கு எடுத்துரைத்தேன். அதன் பிறகு ’என்னால் முடிந்தவரை நான் முயற்சி செய்கிறேன்’ என்று அவள் என்னிடம் கூறி, போட்டியில் கலந்துக்கொள்வதற்குத் தயாரானாள். ஆனால் பிரியங்காவின் தந்தைவழி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எங்கள் வீட்டுப் பெண்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்று கூறினர். அவர்களுக்கும் எல்லாவற்றையும் எடுத்துக்கூறி சம்மதிக்க வைத்தேன். ஆனால் அவர்கள் எல்லோரும் ஒரு கண்டிஷன் போட்டார்கள். நீங்களோ அல்லது பிரியங்காவின் தந்தையோ, எங்கு சென்றாலும் அவளுடன் கூடவே செல்ல வேண்டும் என்று கூறினர்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours