“சேலம் அருகே கோவில் திருவிழாவில் ஆபாச நடனம் நிகழ்ச்சி”- காவல்துறை பாதுகாப்பு.!

Estimated read time 1 min read

சேலம்:

சேலம் இளம்பிள்ளை பகுதியில் கோவில் திருவிழாக்களில், ஆடல் பாடல் நிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதால், பொதுமக்கள் முகம் சுளித்து செல்கின்றனர். இதற்கு, அனுமதி மற்றும் பாதுகாப்பு கொடுத்து, போலீசார் வேடிக்கை பார்த்து வருகின்றனர் என தெரியவருகிறது.

சேலம் மாவட்டத்தில் தற்போது பங்குனி மாத திருவிழா ஒவ்வொரு குக்கிராமத்திலும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றன. இந்த வகையில் சேலம் மாவட்டம், இளம்பிள்ளை காவல் நிலைய எல்லையில் நேற்று இரவு நடன நிகழ்ச்சி, அதுவும் ஆடை குறைப்பு நடன நிகழ்ச்சி அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.

இதற்கு எந்த ஒரு அனுமதியும் நீதிமன்றத்தின் மூலம் பெறாமல் காவல்துறையின் சார்பில் அனுமதி பெற்று நடத்துவதாக தெரிய வருகின்றன. அதுமட்டுமல்லாமல் இந்த நடன நிகழ்ச்சியில் பெண்கள் இரண்டு பாட்டுக்கு ஒரு பாட்டு ஆடை குறைப்பும், ஆபாச நடனம் ஆடி வருவதால் பெண்கள் மத்தியில் முகம் சுளிக்கும் வகையில் இருந்து வருகின்றன.

இதில், சினிமா பாடல்களுக்கு ஏற்றவாறு, ‘ஆர்க்கெஸ்ட்ரா’ குழுவினர் நடனமாடுவர். இதை குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என வயது வித்தியாச மின்றி கண்டு களித்து வந்தனர். ஆனால், தற்போது கோவில் திருவிழாக்களில் நடத்தும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில், இரட்டை அர்த்தமுள்ள ஆபாச பாடல்களுக்கு, ‘ஆர்க்கெஸ்ட்ரா’ குழுவினர் ஒரு விதிமுறையின்றி நடனமாடுகின்றனர்.

இதை அறியாமல் ஆவலுடன் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் கண்டுகளிக்க வரும் பெண்கள், ஆபாச நடனத்தை பார்த்து முகம் சுளித்து திட்டியபடி எழுந்து செல்கின்றனர். மேலும், இளைஞர்களின் மனதை கெடுக்கும் வகையில் இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். பாதுகாப்பு பணிக்கு வரும் போலீசாரும், இதை கண்டும் காணாமல் இருக்கின்றனர்.

இதற்கு, சேலம் அடுத்த இளம்பிள்ளை (எருதுகாரவட்டம்) பகுதியில், கருமாரியம்மன் திருவிழாவையொட்டி, நேற்று இரவு அரங்கேறிய ஆடல் பாடல் நிகழ்ச்சியை உதாரணமாக சொல்லலாம். இந்நிலையில், கோவில் திருவிழாக்களின்போது நடத்தப்படும் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு, கடுமையான விதிமுறைகள் கொண்டு வரவேண்டும் என்று, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்த நடன நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கிய காவல்துறையினர் மீது உயர் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகளிர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

                              – இந்துமதி(தாலுகா செய்தியாளர்) IPD தமிழ் 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours