Cooku with Comali 4 Elimination |குக் வித் கோமாளியில் திடீர் டுவிஸ்ட்…இந்த வாரம் எலிமினேட் ஆகும் போட்டியாளர்!

Estimated read time 1 min read

குக் வித் கோமாளி சீசன் 4: குக் வித் கோமாளி தொடர்தான் தற்போது இளசுகள் முதல் அனைத்து தரப்பினருக்குமான முழு பொதுதுபோக்கு நிகழ்ச்சியாக இருக்கிறது. சமையல் நிகழ்ச்சியை புதுவிதமாக முயற்சித்து, அதனை தற்போது நான்காவது சீசன் வரை கொண்டு வந்திருப்பதன் மூலம், தொடரின் வெற்றியையும், வீச்சையும் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். 

அந்த தொடரில் சமையல்கலை வல்லுநர்களான செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ் ஆகியோரின் கூர்மையான தீர்ப்புகள் முதல் அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வரை அனைத்து அம்சங்களும் ரசிகர்களை தொடர்ந்து ஈர்த்து வருகிறது என கூறலாம். சனி, ஞாயிறு தினங்களில் வரும் அந்த ஒருமணிநேர எபிசோட்களை பார்க்க தொலைக்காட்சியிலும், மொபைலிலும் அனைவரும் மூழ்கிவிடுவார்கள். 

மேலும் படிக்க | வெற்றி விழா கொண்டாடிய விடுதலை படக்குழு… 6ஆம் நாள் வசூல் நிலவரம் என்ன தெரியுமா?

அப்படி  ரசிகர்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி ஷோவாக இருந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது ஷெரின், விசித்ரா, ஸ்ருஷ்டி, மைம் கோபி என புகழ்பெற்ற நடிகர், நடிகைகள் ஏராளமானோர் கலந்துகொண்டு உள்ளனர். குறிப்பாக கடந்த சீசன் வரை கோமாளியாக இருந்து வந்த சிவாங்கி, இந்த சீசனில் குக் ஆக களமிறங்கி கலக்கி வருகிறார்.

இந்த சீசனில் இதுவரை 20 எபிசோட்கள் முடிந்துள்ளன. அதில் இதுவரை கிஷோர், காளையன், ராஜ் அய்யப்பா ஆகிய 3 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர். இந்த வாரம் 4வது எலிமினேஷன் டாஸ்க் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகயுள்ளது. இதனிடையே கடந்த வாரம் நடந்த இம்யூனிட்டி டாஸ்க்கில் மைம் கோபி வெற்றி பெற்றதால் அவர் இந்த வாரம் சமைக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டது. எஞ்சியுள்ள விசித்ரா, ஷெரின், சிவாங்கி, ஸ்ருஷ்டி, விஷால் ஆகிய 6 குக்குகள் இடையே தான் கடும்போட்டி நிலவயுள்ளது.

இந்நிலையில், இந்த வாரம் விஷால் தான் எலிமினேட் செய்யப்பட்ட உள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த முடிவு விஷால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனிடையே குக் வித் கோமாளி சீசன் 4ல் கோமாளிகாக ஜி.பி. முத்து, ஓட்டேரி சிவா, ரவீனா, சில்மிஷம் சிவா, மோனிஷா, சிங்கப்பூர் தீபன் ஆகிய புதிய கோமாளிகளை அறிமுகம் செய்து வைத்து உள்ளனர் விஜய் தொலைக்காட்சி. பழைய கோமாளிகளில் குரேஷி, புகழ், சுனிதா ஆகிய மூன்று பேர் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கௌதம் கார்த்திக்கின் 1947 படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours