4/1/2023 12:22:53 AM
ஐதராபாத்: வம்சி இயக்கத்தில் ரவி தேஜா நடிக்கும், படம் ‘டைகர் நாகேஸ்வரராவ்’. இது பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. ஹீரோயினாக நுபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ் நடிக்கின்றனர். ஆர்.மதி ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தை அக்டோபர் 20ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அக்டோபர் 19ம் தேதி விஜய்யின் லியோ படம் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. 1970களில் ஸ்டூவர்ட்புரம் கிராமத்தில் வாழ்ந்த டைகர் நாகேஸ்வரராவ் என்ற கொள்ளையனை பற்றிய கதையாக இந்த படம் உருவாகிறது. இதில் டைகர் நாகேஸ்வரராவ் கேரக்டரில் ரவி தேஜா நடிக்கிறார். இப்படத்துக்காக தெலங்கானாவில் உள்ள ஒரு கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தில் கிராமம் செட் போடப்பட்டு வருகிறது. இந்த செட்டில்தான் முழு படப்பிடிப்பும் நடைபெற உள்ளது.
+ There are no comments
Add yours