சென்னை: வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியுள்ளதாக கூறி இயக்குனர் மணிரத்னம் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா நகரை சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி அதே பெயரில் இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள படத்தில், வரலாற்றை திரித்து இயக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய கதாப்பாத்திரமான வந்தியத்தேவன் பெயரை தவறாக பயன்படுத்தியதுடன், தனது சுய லாபத்திற்காக வரலாற்றை தவறாக பயன்படுத்தி உள்ளார் என்றும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் படிக்க | ‘ஐஸ்வர்யா ராயால் தான் எனக்கு இது கிடைத்தது’ – சிம்பு சொன்ன சீக்ரெட்
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எடுக்கும்போது, அது வரலாற்றின் அடிப்படையிலான திரைபடம் என்பதால், படம் எடுக்கும் முன்பு உரிய ஆராய்ச்சி மேற்கொண்டிருக்க வேண்டும் என்றும் வரலாற்றில் உள்ள உண்மை பெயர்களை கல்கியும் பயன்படுத்தி உள்ள நிலையில், போர் தந்திரங்களில் சிறந்து விளங்கிய சோழர்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் இயக்குனர் மணிரத்னம் வரலாற்றை திரித்து உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வு துறை ஆகியவற்றிடம் அளித்த புகார்களில் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் படிக்க | கடைசி கட்ட பணிகளில் பிரபாஸின் ஆதி புருஷ் படக் குழு! ரிலீஸ் எப்போது?
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பொன்னியின் செல்வன் நாவலை படித்திருக்கிறீர்களா என மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், இல்லை எனத் தெரிவித்தார். தொடர்ந்து நீதிபதிகள், நாவலை படிக்காத நிலையில் வரலாற்றை திரித்துள்ளதாக எப்படி கூற முடியும் எனவும் பொன்னியின் செல்வன் படம் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளதே தவிர, வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படவில்லை எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும் படிக்க | இன்று பொன்னியின் செல்வன் இசை வெளியீடு… வாடிப்போன வைரமுத்து புலம்பலா – என்ன காரணம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours