3/27/2023 12:40:34 AM
சென்னை: கே.என்.ஆர் மூவிஸ் பட நிறுவனத்துக்காக கே.என்.ஆர்.ராஜா தயாரித்து இயக்கி ஹீரோவாக நடித்து உள்ள படம், ‘மாவீரன் பிள்ளை’. மறைந்த வீரப்பன் மகள் விஜயலட்சுமி ஹீரோயினாக அறிமுகமாகிறார். தவிர, தெருக்கூத்து கலைஞனாக ராதாரவி நடித்துள்ளார். மஞ்சுநாத் ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு ரவிவர்மா இசை அமைத்துள்ளார். ஆலயமணி பாடல்கள் எழுதியுள்ளார். பிரேம் பின்னணி இசை அமைத்துள்ளார். விஜயலட்சுமி கூறுகையில், ‘சின்ன வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. சமூகத்தில் ஒரு பக்கம் குடி, மறுபக்கம் காதல் என்ற பெயரில், பெண்கள் சீரழிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இதுபற்றி படம் உருவாக்கப்பட்டால் விழிப்புணர்வு ஏற்படும். அதனால்தான் இப்படத்தில் நடிக்க நான் ஒப்புக்கொண்டேன்’ என்றார்.
+ There are no comments
Add yours