பொங்கலூரில் கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மளிகை கடை ஒன்று உள்ளது. இந்த மளிகை கடையின் முன்பு உரிமையாளர் மொபட்டை நிறுத்தி வைத்திருந்தனர். சம்பவத்தன்று கடைக்கு வந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் கடையில் குளிர்பானம் வாங்கி விட்டு ,
மொபட்டை தள்ளிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டான். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டி ருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மொபட்டை திருடி சென்ற சிறுவன் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
+ There are no comments
Add yours