சேலம்:
சேலம் நரசுஸ் சாரதி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடை பெற்றது. கல்லூரி தலைவர் நிதிஷ் ஹரிஹர், சார்பு தலைவர் ஐஸ்வர்யா நிதிஷ், துணைத்தலைவர் மற்றும் செயலாளர் பிரபாகரன், முதல்வர் முனுசாமி விஸ்வநா தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தி னராக சேலம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் மலையாளமூர்த்தி கலந்து கொண்டு கருத்தரங்குகளை தொடங்கி வைத்தார். இ. இ. இ. துறையின் ‘அக்னி 2 கே 23’, இ. சி. இ. துறையின் ‘அனுடாரா 2 கே 23’, சி. எஸ். இ. துறையின் ‘சிறிஸ்ட்டி 2 கே 23’, மெக்கானிக் கல் துறையின் ஸ்பந்தனா 2 கே 23. அறிவியல் மற்றும் மனிதவியல் துறையின் விட்டர்கா 2 கே 23 போன்ற தலைப்புகளில் கருத்தரங்கை நடத்தின.
மேலும் காகித விளக்கக்காட்சி, வினாடி-வினா, குறியீட்டு முறை. பிழைத்திருத்தம், பி. சி. பி. வடிவமைப்பு போன்ற பல தொழில்நுட்ப போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற வர்களுக்கு சான்றிதழ். பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
+ There are no comments
Add yours