பிரபல மலையாள நடிகர் இன்னசென்ட் மறைவு: பிரதமர் மோடி, கேரள முதல்வர் இரங்கல் | Famous Malayalam actor Innocent passes away: PM Modi, Kerala CM condole

Estimated read time 1 min read

பிரபல மலையாள நடிகர் இன்னசென்ட் காலமானார். அவருக்கு வயது 75. மலையாள சினிமாவின் ‘காமெடி கிங்’ என்று அழைக்கப்படும் இன்னசென்ட், தமிழில் ‘லேசா லேசா’,‘நான் அவளை சந்தித்தபோது’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். சுமார் 700-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் குணசித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். மலையாள நடிகர் சங்கத் தலைவராகவும் சாலக்குடி தொகுதி மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன், தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் குணம் அடைந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் கவலைக்கிடமான நிலையிலேயே இருந்தார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு அவர் உயிரிழந்தார். அவர் உடல் கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு மலையாள நடிகர், நடிகைகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அவருடைய இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது.

இன்னசென்ட் மறைவுக்கு பிரதமர் மோடி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட அரசியல் தலைவர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ரசிகர்களின் மனதை நகைச்சுவையால் நிரப்பிய இன்னசென்ட் என்றென்றும் நினைவுகூரப்படுவார்’ என்று தெரிவித்துள்ளார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours