SSMB28 Starring Superstar Mahesh Babu!

Estimated read time 1 min read

சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கும், எஸ்.எஸ்.எம்.பி 28 !

3/27/2023 12:14:20 PM

சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ், ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் இணையும் SSMB28  திரைப்படம், ஜனவரி 13, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது !!

தெலுங்கு திரையுலகை அதிர வைத்த,   அத்தடு மற்றும் கலேஜா படங்களுக்குப் பிறகு,  சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மற்றும் திரைக்கதை  வித்தைக்காரர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கூட்டணியில் ஹாட்ரிக் பிளாக்பஸ்டராக  உருவாகி வருகிறது SSMB28.  இந்த முறை, கதையின் களம், மேக்கிங், தொழில்நுட்பம், மகேஷ் பாபுவின் கதாபாத்திரம் என அனைத்துமே முந்தைய  இரண்டு படங்களை விட அட்டகாசமாக ரசிகர்கள் கொண்டாடும் வகையில்  இருக்கும்.

இப்படத்தில் மகேஷ் பாபு ஒரு ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மேலும் அவர் இந்த படத்திற்காக தன் உடலமைப்பைப் மெருகேற்றி,  இதுவரையில் காணாத மகேஷ்பாபுவை ரசிகர்களுக்காக திரையில் கொண்டு வந்துள்ளார். ஆர்வத்துடன் இருக்கும் ரசிகர்களை மகிழ்விக்கும் விதத்தில் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் வெளியீட்டு தேதியை, மகேஷ் பாபுவின் கதாப்பாத்திர லுக்குடன் கூடிய ஒரு போஸ்டர் மூலம்   வெளியிட்டுள்ளனர்.

இந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும்,  #SSMB28 திரைப்படம் ஜனவரி 13, 2023 அன்று சங்கராந்தி விழாக்கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகும். இந்த போஸ்டரில் மகேஷ் பாபு ஸ்டைலான தோற்றம் மற்றும் லேசான தாடியுடன் அழகின் உருவமாக, சிகரெட் புகைத்து கொண்டு சாலையில் நேர்த்தியாக நடந்து செல்கிறார், மேலும் போஸ்டரில் அடியாட்கள் அவரை வணங்குகிறார்கள். இந்த போஸ்டர் பொதுமக்களையும், திரைப்பட ரசிகர்களையும்  ஒரு சேர மகிழ்விக்கும் வண்ணம்  அமைந்துள்ளது.

டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸின் சார்பில் எஸ் ராதாகிருஷ்ணா (சீனா பாபு) மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படத்தைத் தயாரிக்கிறார். குடும்ப அம்சங்களுடன் கூடிய ஆக்‌ஷன் கலந்த இந்த என்டர்டெய்னரில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.

மகேஷ் பாபுவை இதுவரை பார்த்திராத கேரக்டரில் காண்பிக்க, இயக்குநர் திரிவிக்ரம் தனித்தன்மையுடன் கூடியதொரு கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார். முன்னணி நட்சத்திரங்கள்  சிறந்த  தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு இப்படத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

#SSMB28 படத்தை  தேசிய விருது பெற்ற தொழில்நுட்ப வல்லுநர் நவின் நூலி எடிட்டிங் செய்கிறார், கலை இயக்குநராக AS  பிரகாஷ், இசையமைப்பாளராக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் S தமன் மற்றும் ஒளிப்பதிவாளராக PS வினோத் ஆகியோர் பணியாற்றுகின்றனர்

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours