வயது குறித்த சர்ச்சைக்கு கிஷோர்-ப்ரீத்தி பளீச் பதில்

Estimated read time 1 min read

வயது குறித்த சர்ச்சைக்கு கிஷோர்-ப்ரீத்தி பளீச் பதில்

26 மார், 2023 – 12:10 IST

எழுத்தின் அளவு:


'Pasanga'-fame-Kishore-and-serial-actress-Preethi-Kumar-get-married

பசங்க திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கிஷோரும், சின்னத்திரை நடிகை ப்ரீத்தியும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இதில், ப்ரீத்தி கிஷோரை விட நான்கு வயது பெரியவர். இவர்களது திருமணம் அண்மையில் உற்றார் உறவினர் புடைசூழ நடந்து முடிந்தது. இருப்பினும், சிலர் இருவரது வயது வித்தியாசத்தை வைத்து நெகட்டிவாக கமெண்ட் செய்து வந்தனர். இதுகுறித்து திருமணம் முடிந்த கையோடு பேட்டி கொடுத்த தம்பதிகள் ‘வயது வெறும் நம்பர் தான்’ என கூறியுள்ளனர்.

மேலும், கிஷோர் தனது காதல் குறித்து கூறும் போது, ‘வயதை வைத்து பேசுபவர்களுக்கெல்லாம் நான் ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். எனக்கு கிடைத்த பெண் போல உங்களுக்கும் கிடைத்தால் நிச்சயமாக இப்படி பேசமாட்டீர்கள். எங்கள் இருவருக்கும் பிடித்திருக்கிறது. வீட்டிலும் பிரச்னை இல்லை. இப்போது திருமணத்தையும் முடித்துவிட்டோம். இதில் யாருக்கு என்ன பிரச்னை’ என ஓப்பனாக பேசி விமர்சனம் செய்தவர்களின் வாயை அடைத்துள்ளார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours