டோலிவுட்டில் முன்னணி நடிகராக திகழும் நானி நடித்துள்ள ‘தசரா’ படம், வரும் 30ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அப்படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் செய்த செயல் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

‘தசரா’ பட ரிலீஸ்

நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து, ரசிகர்களின் மனதில் மெல்ல மெல்ல நிரந்தர இடத்தைப் பிடித்த நடிகர் நானி. ஆரம்பத்திலிருந்து ஃபீல் குட் படங்களாக நடித்து வந்த இவர், தற்போது முதல் முறையாக வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் ‘தசரா’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம், இம்மாதம் 30ஆம் தேதியன்று வெளியாகிறது. நானி மட்டுமன்றி, நடிகை கீர்த்தி சுரேஷும் பாவாடை-தாவணி, டஸ்கி மேக்-அப் என இப்படத்தில் புதுமை காட்டியுள்ளார். தெலுங்கில் தயாராகியுள்ள இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இப்படத்தை, ஸ்ரீகாந்த ஓடெல்லா என்பவர் இயக்குகிறார். இது, அவர் இயக்கும் முதல் படமாகும்.

தங்கநாணயங்கள்:

தசரா பட நாயகி கீர்த்தி, அப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின் போது படக்குழுவினருக்கு தங்க நாணயத்தை பரிசாக வழங்கியுள்ளாராம்.

Also Read|Aishwarya Rajinikanth: ரஜினி மகள் வீட்டில் தங்கம், வைரம் கொள்ளை போன விவகாரம் – பணிப்பெண் கைது: சிக்கியது எப்படி?

தங்க நாணயத்தை பரிசளித்த கீர்த்தி

தசரா படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின் போது, கீர்த்தி சுரேஷ் கொஞ்சம் எமோஷனலாக இருந்தாராம். இது குறித்து சமூக வலைதளங்களில் வட்டமடிக்கும் செய்தி என்னவென்றால், தசரா படக்குழுவினருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்ட கீர்த்தி 130 தங்க நாணயங்களை அதில் பணிபுரிந்தவர்களுக்கு பரிசாக வழங்கினாராம். அந்த நாணயங்கள் ஒவ்வொன்றும் 10 கிராம் மதிப்புடையவையாம். இப்படி படக்குழுவினருக்கு பரிசளிப்பதற்காக கீர்த்தி சுரேஷ் 70 முதல் 75 லட்சம் வரை செலவு செய்திருப்பார் என்று கூறப்படுகிறது. இந்த செய்தியை கேட்ட பல நெட்டிசன்கள், கீர்த்தி சுரேஷ் பரிசு கொடுத்த விஷயத்தை வைரலாக்கி வருகின்றனர்.

Also Read|Actress Abhirami: பாபா பிளாக்‌ ஷீப் படத்தில் கம்பேக் கொடுக்கும் அபிராமி.. நடிப்பை பார்த்து கண்கலங்கிய படக்குழு

ப்ரமோஷன் பணிகளில் பிசியாக படக்குழுவினர்

தசரா படம், இம்மாத இறுதியில் வெளியாகவுள்ளதை தொடர்ந்து ரிலீஸிற்கு முந்தைய ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, நடிகர் நானி சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்ற இந்தியா-ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தோன்றி, தசரா படத்திற்கு ப்ரமோஷன் செய்தார். இது மட்டுமன்றி, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையளம் என பல மொழிகளில் படம் வெளியாவதால் பல்வேறு இடங்களுக்குச் சென்று படக்குழுவினர் படத்திற்கு ப்ரமோஷன் செய்து வருகின்றனர்.

கீர்த்திக்கு நல்ல திருப்பத்தை தருமா ‘தசரா’?

கோலிவுட்டிற்கு வந்த புதிதில் அமைதியான நடிப்பாலும், அழகு சிரிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷிற்கு சமீபத்தில் வெளியான அவரது படங்கள் பெரிதாக பெயர் பெற்று கொடுக்கவில்லை. 2018ஆம் ஆண்டில் வெளியான மகாநதி படத்தில் இவரது நடிப்பு பாரட்டப்பட்டதை அடுத்து, அதற்கடுத்தடுத்து வெளியான எந்த படங்களுக்கும் கீர்த்திக்கு கை காெடுக்கவில்லை. கடந்த சில நாட்களாக, தனது நடிப்பிற்காகவும் நெகடிவ் விமர்சனங்களையே சந்தித்து வருகிறார் கீர்த்தி. இவர், தற்போது வெளியாகவுள்ள தசரா படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசதான தோற்றத்தில் வருகிறார். படத்தின் கதையும் ரசிகர்களுக்கு பிடித்தார் போல உள்ளதால், இப்படம் கண்டிப்பாக கீர்த்தி சுரேஷின் சினிமா வாழ்க்கைக்கு ஒரு நல்ல திருப்புமுனையாக இருக்கும் என நம்பப்படுகிறது.

+ There are no comments
Add yours