விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காண காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொடர்கள் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகர் கவின். ஏற்கனவே ஏராளமான ரசிகர்களை கொண்ட கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் போட்டியாளராக கலந்து கொண்ட பின்னர் அவரின் லெவல் வேறு எங்கோ போனது. டைட்டில் வின்னர் கவின் தான் என்ற கணக்கில் இருந்த ரசிகர்களுக்கு கவின் பணப்பெட்டியுடன் வெளியேறியது செம்ம ஷாக் கொடுத்தது.

கவின் – பிரியங்கா மோகன்

வரவேற்பை பெற்ற டாடா :

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த பிறகு கவினுக்கு ஏராளமான சினிமா வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் அவருக்கு வெளியில் இருந்த வரவேற்பை வெளிக்காட்டும் விதமாக வெளியானது ‘லிஃப்ட்’ திரைப்படம். ஹாரர் திரில்லர் ஜானரில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வெப் சீரிஸ் ஒன்றில் நடித்தார் கவின்.

அடுத்தாக ஒலிம்பியா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ். அம்பேத்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கணேஷ் .கே. பாபு இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘டாடா’. இப்படத்தில் அபர்ணா தாஸ், பாக்யராஜ், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா பாஸ்கரன், ஹாரிஸ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது.

கவின் அடுத்த பட அப்டேட் :

இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் கவின் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இப்படத்தை டான்ஸ் மாஸ்டர் சதீஷ் கிருஷ்ணன் இயக்குகிறார். பல திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ள சதீஷ் கிருஷ்ணன் இப்படம் மூலம் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க உள்ளார் என கூறப்படுகிறது.

ஹீரோயின் இவரா?

மேலும் புதிய தகவலாக இப்படத்தில் கவின் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு மற்றும் படப்பிடிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது என கூறப்படுகிறது. இப்படம் நகரத்தில் நகரும் ஒரு இசை சார்ந்த காதல் கதை என கூறப்படுகிறது. இணையத்தில் வெளியாகியுள்ள இந்த தகவலுக்கு பலரும் லைக்ஸ்களையும், கமெண்ட்களையும் குவித்துள்ளனர். ஒரு சில ரசிகர்கள் அடுத்த சிவகார்த்திகேயன் என கவினை பாராட்டி வருகிறார்கள்.

+ There are no comments
Add yours