காசேதான் கடவுளடா பழைய படம் மாதிரி இருக்காது: சிவா சொல்கிறார்
23 மார், 2023 – 13:50 IST
1972ம் ஆண்டு வெளியான கிளாசிக் காமெடி படம் ‘காசேதான் கடவுளடா’. இந்த படத்தில் முத்துராமன், தேங்காய் சீனிவாசன், மனோரமா, ஸ்ரீகாந்த் நடித்திருந்தார்கள். இந்த படத்தை தற்போது அதே பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இதில் முத்துராமன் நடித்த கேரக்டரில் மிர்சி சிவாவும், தேங்காய் சீனிவாசன் நடித்த கேரக்டரில் யோகி பாபுவும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர பிரியா ஆனந்த், லட்சுமி பிரியா, ஊர்வசி நடித்துள்ளனர். நாளை இந்த படம் வெளிவருகிறது.
படம் குறித்து சிவா கூறியதாவது: ‘காசேதான் கடவுளடா’ எவராலும் திரும்ப எடுக்க முடியாத கிளாசிக் காமெடி படம். என்றாலும் அதை நாங்கள் முயற்சி செய்திருக்கிறோம். அதனால் அந்த படத்தோடு இதனை ஒப்பிடாமல் பார்க்க வேண்டும் என்று ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன். அந்த காலத்திற்கு ஏற்ற மாதிரியான காமெடி அப்போது பெரிதாக ரசிக்கப்பட்டது. அதனை இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி மாற்றுவது சவால். அதனை இயக்குனர் கண்ணன் திறம்பட கையாண்டிருக்கிறார். இந்த படத்தை மக்கள் வரவேற்றால் இதுபோன்ற பல கிளாசிக் படங்கள் மீண்டும் வரும். என்றார்.
Advertisement
வரவிருக்கும் படங்கள் !
- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
- தேவதாஸ்
- நடிகர் : உமாபதி
- நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
- இயக்குனர் :மகேஷ்.ரா
- தமிழரசன்
- நடிகர் : விஜய் ஆண்டனி
- நடிகை : ரம்யா நம்பீசன்
- இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
- எங் மங் சங்
- நடிகர் : பிரபுதேவா
- நடிகை : லட்சுமி மேனன்
- இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
Tweets @dinamalarcinema
+ There are no comments
Add yours