நடிகர் அஜித்குமாரின் தந்தை இன்று அதிகாலை உயிரிழந்த நிலையில், இரங்கல் தகவல்களை மின்னஞ்சலில் அனுப்பும்படியும், குடும்ப நிகழ்வில் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ள ஒத்துழைக்கும்படியும் நடிகர் அஜித் கோரிக்கை விடுத்துள்ளார்.

கூட்டங்களைத் தவிர்ப்பவர், ப்ரைவேசி பேணுபவர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான அஜித் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக பெரும் ரசிகர் பட்டாளத்துடன் டாப் ஸ்டாராக வலம் வந்தாலும் தன் தனிப்பட்ட வாழ்வை ரசிகர்கள் உள்பட எவரது இடையூறும் இல்லாமல் பேணுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பவராகவும் இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலால கோலோச்சி வரும் அஜித், பட ப்ரமோஷன் நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள், விருது விழாக்கள் என அனைத்தையுமே தன் தொடக்க கால திரை வாழ்வு முதலே பெரும்பாலும் தவிர்த்தே வந்துள்ளார்.

குடும்பத்துக்கு முக்கியத்துவம்

தன் பிஸியான திரை வாழ்வுக்கு மத்தியிலும் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதற்கு பெரும் முக்கியத்துவம் தந்து அஜித் ப்ரைவேசி பேணி வருகிறார். இந்நிலையில், இன்று அஜித்தின் தந்தை தன் 85ஆவது வயதில் அதிகாலை உயிரிழந்த நிலையில், குடும்ப நிகழ்வான தன் தந்தையின் இறுதிச்சடங்கை தனிப்பட்ட முறையில் நடத்த ஒத்துழைக்கும்படி அனைவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ரசிகர்கள் தங்கள் இரங்கல் செய்திகளை மக்கள் மின்னஞ்சல் வழியாக அனுப்பும்படியும் கோடி மின்னஞ்சல் முகவரியையும் அஜித் தன் அறிக்கையில் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக அஜித் தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில், அஜித்தின் கோரிக்கைகளையும் மீறி ரசிகர்கள் அங்கு குவிந்தனர்.

அஜித் தந்தை இறுதிச்சடங்கு

அஜித் தந்தை சுப்பிரமணியனின் உடல் சென்னை, பெசண்ட் நகரில் இன்று காலை 10 மணிக்கு தகனம் செய்யப்பட்டது. முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஜித்தினர் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர்.

அமைச்சர் உதயநிதிஸ்டாலின் உள்ளிட்டோர் அஜித் தந்தையின் இறுதிச்சடங்கில் நேரில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அஜித்தின் தந்தை அஜித் மற்றும் அவரது சகோதரர்கள் அனுப் குமார், அனில் குமார் குடும்பத்தினர் கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

+ There are no comments
Add yours