3/23/2023 12:16:11 AM
சென்னை: ‘யானை முகத்தான்’ படத்தில் விநாயகர் வேடத்தில் நடிக்கிறார் யோகி பாபு. இந்த படத்தை ரெஜிஷ் மிதிலா இயக்குகிறார். இவர், மலையாளத்தில் ‘லால் பகதூர் சாஸ்திரி’, ‘வழிகுழியிலே கொலபாதகம்’, ‘இன்னு முதல்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். முதல்முறையாக தமிழ் படம் இயக்க வந்திருக்கிறார். அவர் கூறியது: தமிழ் சினிமாவில் தடம் பதிப்பதுதான் எனது லட்சியமாக இருந்தது. அது தள்ளிப்போய்க்கொண்டே இருந்ததால், மலையாள படங்களை இயக்கி வந்தேன். இப்போதுதான் தமிழ் படம் இயக்கும் சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது. இந்த படத்தை நானே தயாரிப்பதால் சவுகரியமாக இருக்கிறது.
நான் இயக்கிய மலையாள படத்தில் ரமேஷ் திலக் நடித்தார். அவரிடம் இந்த படத்தின் கதையை சொன்னேன். யோகி பாபு நடித்தால் நன்றாக இருக்கும் என்றார். அவரே யோகி பாபுவை சந்திக்க ஏற்பாடும் செய்தார். கதையை கேட்டதும் இதில் நடிக்க யோகி பாபு ஒப்புக்கொண்டார். கதைப்படி சென்னையில் ஆட்டோ டிரைவராக இருக்கும் ரமேஷ் திலக், தீவிரமான விநாயகப் பக்தர். அதே சமயம், கொஞ்சம் பொய், பித்தலாட்டம் என இருக்கிறவர். அவர் முன்னால் வந்து, ‘நான் விநாயகர்’னு அறிமுகமாகிறார், யோகிபாபு. அவர் நம்பமாட்டார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை. இதில் யோகிபாபுவுக்கு இரட்டை வேடம். அதில் இரண்டு வித பாணியை வெளிப்படுத்தியுள்ளார். காமெடிக்கு முக்கியத்துவம் இருந்தாலும் எமோஷனுக்கும் படத்தில் முக்கிய பங்கு இருக்கிறது. முதல் பாதியில் சென்னையிலும் இரண்டாம் பாதி ராஜஸ்தானிலும் கதை நடக்கும்.
+ There are no comments
Add yours