சேலம்:
தாரமங்கலம் அருகே உள்ள மானத்தாள் கிராமம், தாண்டவனூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் சென்னை ஆயுதப்டையில் போலீஸ் ஏட்டாக பணி யாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சரஸ்வதி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் தாரமங்கலம் ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் அமிர்தவள்ளி என்பவருக்கும், சம்பத்குமா ருக்கும் இடையே கடந்த 15 ஆண்டுகளாக தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. கணவனை இழந்த அமிர்த வள்ளி ஒரு மகனுடன் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பத்குமார் அமிர்தவள்ளியுடன் இருந்து கொண்டு மனைவி குழந்தைகளை கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அமிர்தவள்ளி, சம்பவத்தன்று வீட்டில் இருப்பது தெரிய வந்ததால் கணவனை தேடி சரஸ்வதி அங்கு சென்றுள்ளார்.
மனைவியை பார்த்தவுடன் அங்கிருந்து போலீஸ் ஏட்டு சம்பத்குமார் வெளியே ஓடியுள்ளார். பின்னர் வீட்டில் புகுந்த சரஸ்வதியை அமிர்தவள்ளி தாக்கியுள்ளார். பதிலுக்கு அவரும் தாக்கியதால் இருவரும் காயம் அடைந்து ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
+ There are no comments
Add yours