செங்கல்பட்டு டவுன்:
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யஞ்சேரி, கிளாம்பாக்கம், பிரியா நகர், ஊரப்பாக்கம் ரயில் நிலையம் ஆகிய பகுதிகளின் முக்கிய சாலைகளில், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தின் சார்பில், ‘சிசிடிவி’ கேமரா பொருத்தப்பட்டிருந்தது.
இப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 30 கேமராக்களும், பழுது காரணமாக செயல்படாமல் இருந்ததாக தெரிகிறது.
இது குறித்து, கூடுவாஞ்சேரி காவல் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாலதி, அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தபோது, கேமராக்கள் பழுது கண்டுபிடிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டரின் அதிரடி நடவடிக்கையால், கேமராக்களை பழுது பார்த்து பொருத்தம் பணி துவங்கப்பட்டது.
இது குறித்து, இன்ஸ்பெக்டர் கூறியதாவது:
ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில், சுமார் 30 ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் பழுது காரணமாக, அப்பகுதியில் நடைபெறக்கூடிய குற்றச் செயல்களை கண்டுபிடிக்க இயலாத நிலை ஏற்பட்டது.
நேரில் வந்து ஆய்வு செய்தபோது, கேமராக்கள் பழுதாகி உள்ளது தெரியவந்தது.
எனவே, ‘சிசிடிவி’ கேமராக்களில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கி, கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் இரண்டு நாட்களில் நிறைவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
+ There are no comments
Add yours