3/22/2023 12:34:10 AM
சென்னை: பத்து தல படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் சாயிஷா. வனமகன், கஜினிகாந்த், டெடி, காப்பான் படங்களில் நடித்தவர் சாயிஷா. இவர் இந்தியில் அஜய் தேவ்கனுடன் ஷிவாய் படத்தில் நடித்திருக்கிறார். தமிழில் ஆர்யாவுடன் நடிக்கும்போது இவர்களுக்கு இடையே காதல் ஏற்படு, திருமணத்தில் முடிந்தது. திருமணத்துக்கு பிறகு ஆர்யா ஜோடியாக டெடி படத்தில் சாயிஷா நடித்தார். பின்னர் கன்னடத்தில் யுவரத்னா படத்தில் நடித்தார். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் தனது நடன வீடியோக்களை சாயிஷா பதிவிட்டு வந்தார். இதையடுத்து சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் நடிக்கும் பத்து தல படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடும் வாய்ப்பு சாயிஷாவுக்கு கிடைத்திருக்கிறது. இதற்கான படப்பிடிப்பும் நடந்து முடிந்தது. இந்த பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஒபெலி கிருஷ்ணா இயக்கினார்.
திருமணத்துக்கு முன்பு ஹோம்லியாக நடித்து வந்த சாயிஷா, இப்போது கவர்ச்சியாக நடிப்பது கடும் விமர்சனங்களை அவர் எதிர்கொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது. சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலரும் அவரை கடுமையாக சாடி வருகின்றனர். ஆனால் இது பற்றியெல்லாம் கவலைப்படாமல், தொடர்ந்து படங்களில் நடிப்பேன். தேவைப்பட்டால் கவர்ச்சியாகவும் நடிப்பேன் என்கிறார் சாயிஷா.
+ There are no comments
Add yours