Actor Amanda Bynes Hospitalised After Seen Roaming Streets Los Angeles Without Clothes

Estimated read time 1 min read

ஹாலிவுட்டின் பிரபல நடிகை இருந்தவர், அமாண்டா லாரா பைன்ஸ் (Amanda Laura Bynes). இவர், சமீப காலமாக வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆடையில்லாமல் சுற்றித்திரிந்த இவரை, போலீஸார் மீட்டு கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

யார் இந்த அமாண்டா? 

1900 முதல் 2000 ஆண்டு காலக்கட்டத்தில் ஹாலிவுட்டின் மிகப்பெரிய தொலைக்காட்சி நடிகைகளுள் ஒருவராக இருந்தவர் அமாண்டா பைன்ஸ். குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர், நிக்கலோடியன் என்ற தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆல் தட், தி அமாண்டா ஷோ போன்ற தொடர் மூலம் பல வெளிநாட்டு 90’ஸ் குழந்தைகளுக்கு ஃபேவரட் நடிகையானார். 


பருவ வயதிற்கு வந்த இவர், வார்னர் ப்ரதர்ஸின் தயாரிப்பில் உருவான வாட் ஐ லைக் அபவுட் யூ (What I Like About You) என்ற தொடரில் நடித்தார். அதன் பின்னர், 2002ஆம் ஆண்டில் பிக் ஃபேட் லையர் என்ற படம் மூலம் தனது ஹாலிவுட்  பயணத்தை தொடங்கினார். 2010ஆம் ஆண்டு வரை தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவர், தனது வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்தித்தால், சில வருடங்களுக்கு சினிமாவிலிருந்து ப்ரேக் எடுப்பதாக அறிவித்தார். அதன் பிறகு, போதை பழக்கங்களுக்கு அடிமையாகி பல சட்ட ரீதியான பிரச்சனைகளை சந்தித்தார். சில வருடங்களுக்கு முன்புதான், தனக்கு மீண்டும் டெலிவிஷன் தொடர்களில் நடிக்க ஆசை இருப்பதாக தெரிவித்திருந்தார். 

Also Read|அயோத்தி பட வெற்றி விழா…இயக்குநர், தயாரிப்பாளருக்கு தங்க செயின் பரிசளித்த சசிகுமார்!

ஆடையில்லாமல் சுற்றிய நடிகை!

7 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக மாறிய அமாண்டா, தனது வாழ்க்கையில் சில பிரச்சனைகளை எதிர்கொண்டார். நடித்துக்கொண்டிருந்தபோதே, மது போதையில் வாகனம் ஓட்டியது, போதை பொருளை உபயோகப்படுத்தியது என இவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடிகை அமாண்டா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு தெருவில் ஆடைகள் எதுவும் அணியாமல், யார் துணையுமின்றி சுற்றித்திரிந்துள்ளார். காவல் துறையினர் இது குறித்து பேசுகையில், ஆடையின்றி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சுற்றிய அமாண்டா, அவராகவே 911-ற்கு(அமெரிக்காவின் உதவி எண்) தொடர்பு கொண்டு தனக்கு உதவி தேவைப்படுகிறது எனக் கூறியதாகவும், அதன் பிறகு அருகிலிருந்த ஒரு காவல் நிலையத்திற்கு அவரை அழைத்து சென்றதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து, அமாண்டா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார், 72 மணி நேர மருத்துவ கண்காணிப்பிலும் வைக்கப்பட்டுள்ளார். 


Also Read|Ajith – Shalini Photos: அக்கம்பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்.. படகில் காதல் பொங்க பயணிக்கும் அஜித் – ஷாலினி!

அமாண்டாவின் இந்த நிலைக்கு காரணம் என்ன?

அமாண்டாவை அந்த நிலையில் நேரில் பார்த்தவர்கள், இந்த சம்பவம் குறித்து பேசுகையில், சாலையில் சென்ற சில வாகனங்களை அவர் கைக்காட்டி நிறுத்தியதாகவும், தனக்கு உதவி தேவைப்படுவதாக அவர் கூறியதாகவும் தெரிவித்தனர். அமாண்டா, 2013ஆம் ஆண்டிலிருந்து தனது பெற்றோர்களின் கண்காணிப்பில்தான் இருந்துள்ளார். ஆனால், சில நாட்களாக அவரது பெற்றோர்களுடன் அவர் தொடர்பில் இல்லை என கூறப்படுகிறது. அவரது முன்னாள் காதலர் மைக்கேல், அமாண்டா பல நாட்களாக தனக்கான மருந்துகளை உட்கெள்வதில்லை என தெரிவித்துள்ளார். 

சரியான மனநிலையில் இல்லாததால்தான், கன்சர்வேட்டர்ஷிப் எனப்படும் பாதுகாவலரின் பொறுப்பில்தான் அமாண்டா கடந்த சில வருடங்களாக இருந்துள்ளார். அவரது பாதுகாப்பு ஓராண்டிற்கு முன்னர்தான் திரும்ப பெறப்பட்டுள்ளது. பாதுகாவலரின் பொறுப்பில் இருந்த போதே, இவருக்கு பை போலார் டிசார்டர் எனப்படும் மனநோய் இருந்துள்ளது. இதனால், மற்றவர்களுக்கும் தனக்கும் தீங்கு ஏற்படும் வகையில் பல செயல்களில் ஈடுபட்டுள்ளார், அமாண்டா. அதன் பிறகு அவர் மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தனக்கு ஏற்ற மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்ளாததுதான் அமாண்டாவின் தற்போதைய நிலைக்கு காரணமாக கருதப்படுகிறது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours