நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கோவை குணா உடல்நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அசத்தப் போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் கோவை குணா. தனது தனித்துவ உடல்மொழியால் ரசிகர்களை ஈர்த்தவர். ‘சென்னை காதல்’ என்ற படத்தில் நடிகராக நடித்துள்ளார். ‘கலக்கப் போவது யாரு’ என்ற நிகழ்ச்சியில் அவர் டைட்டில் வின்னரான இவர், கவுண்டமணி, ராதாரவி, சிவாஜி உள்ளிட்ட நடிகர்களின் குரலை மிமிக்ரி செய்வதில் புகழ்பெற்றவர். குறிப்பாக நடிகர் ஜனகராஜின் குரலை அப்படியே பிரதிபலிப்பவர் குணா.
இந்நிலையில், உடல் நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
+ There are no comments
Add yours