3/21/2023 3:49:31 PM
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ள படம், ‘1947 ஆகஸ்ட் 16’. கவுதம் கார்த்திக், புதுமுகம் ரேவதி, புகழ் உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார். படம் குறித்து கவுதம் கார்த்திக் கூறுகையில், ‘இந்திய சுதந்திரப் போராட்டம் நடந்த காலத்தில், தொலைதூர கிராமத்தில் ஒருவன் பிரிட்டீஷ் படைகளுடன் போராடும் கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது. முதலில் எனக்கும், ரேவதிக்குமான காதல் வெற்றிபெறுவதற்காகப் போராடுகிறேன்.
அப்படிப்பட்ட நான், ஒருகட்டத்தில் செங்காடு என்ற கிராமத்தில் ஏற்படும் பிரச்னைகளில் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறேன். 1947ல் சுதந்திரம் கிடைப்பதற்கு முந்தைய ஆகஸ்ட் 14, சுதந்திரம் கிடைத்த பிறகு ஆகஸ்ட் 15, மறுநாள் ஆகஸ்ட் 16 ஆகிய நாட்களில் நடக்கும் கதையுடன் படம் உருவாகியுள்ளது. திருநெல்வேலி வட்டார வழக்கு பேசி நடித்திருக்கிறேன். எனது திரையுலகப் பயணத்தில் மிகவும் பெருமைப்படக்கூடிய படமாக இருக்கும். காமெடி மட்டுமே செய்து வந்த புகழ், இதில் குணச்சித்திர வேடத்தில் அசத்தியுள்ளார்’ என்றார்.
+ There are no comments
Add yours