3/20/2023 12:48:53 AM
மும்பை: ‘இந்திய பெண்கள் சோம்பேறி கள்’ என்று பேசிய நடிகை சோனாலி குல்கர்னி, அப்பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கேட்டார். பாலிவுட் நடிகையும், தமிழில் ரிலீசான ‘மே மாதம்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவருமான சோனாலி குல்கர்னி, சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் ேபசும்போது, ‘இந்திய பெண்கள் சோம்பேறி கள். அவர்கள் தங்களது வாழ்க்கையை உற்சாகப்படுத்திக் கொள்வதற்கு பதிலாக, தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக காதலன் அல்லது கணவனை தேடுகிறார்கள்’ என்றார். இதையடுத்து அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் மன வேதனை அடைந்த சோனாலி குல்கர்னி வெளியிட்டுள்ள பதிவில், ‘நான் பேசிய விஷயங்கள் ெபண்களைக் காயப்படுத்துவதற்காக அல்ல. அது என் நோக்கமும் கிடையாது. தனிப்பட்ட முறையில் என்னைத் தொடர்புகொண்டு பாராட்டிப் பேசிய அல்லது விமர்சித்த அனைவருக்கும் நன்றி. எனது கருத்தின் மூலம் பெண்களை மட்டுமின்றி, இங்குள்ள ஒட்டுமொத்த மனித குலத்தையும் சிந்திக்க வைப்பதற்கான முயற்சிகளைச் செய்தேன். நான் பேசிய கருத்துகள் யாரையாவது புண்படுத்தி இருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இச்சம்பவத்தில் இருந்து நிறைய பாடங்களை கற்றுக்கொண்டேன்’ என்று கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours