மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபின் தாஸ் இயக்கத்தில் பசில் ஜோசப் நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி வெளியான மலையாளப்படம் ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’. தர்ஷனா ராஜேந்திரன், அஜு வர்கீஸ் உள்ளிட்டோர் நடித்த இப்படதிற்கு அங்கிட் மேனன் இசையமைத்திருந்தார். ரூ.6 கோடியில் உருவான இப்படம் ரூ.50 கோடி வரை வசூலித்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து படம் ஓடிடியில் வெளியான பிறகு மலையாளத்தைக் க ந்து பல்வேறு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
குடும்ப வன்முறையைப் பேசும் இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை ஆமீர்கான் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியில் படம் ரீமேக் ஆக உள்ளதாகவும் மலையாளத்தில் படத்தை இயக்கிய விபின் தாஸே இந்தியில் இயக்குவார் எனவும் கூறப்படுகிறது. மேலும், தர்ஷனா ராஜேந்திரன் கதாபாத்திரத்தில் ‘தங்கல்’ படம் மூலம் பிரபலமடைந்த நடிகை பாத்திமா சனா ஷேக் நடிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
+ There are no comments
Add yours