விராட் கோலி பயோபிக்: ராம் சரண் ஆர்வம் | Ram Charan Interested in Virat Kohli Biopic

Estimated read time 1 min read

ராம்சரண், ’ஆர்ஆர்ஆர்’ படத்துக்கு பிறகு சர்வதேச நடிகராக மாறியிருக்கிறார். அந்த படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதை வென்ற பிறகு, அவருக்கான வரவேற்பு ரசிகர்கள் இடையே அதிகரித்துள்ளது. அவர் ஹாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில், விளையாட்டு வீரர்களின் பயோபிக்கில் நடிக்க தனக்கு ஆர்வம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அவரிடம் விராட் கோலி பயோபிக்கில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா? என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர்,”கண்டிப்பாக நடிப்பேன். ஏனென்றால், அவர் ஊக்கமளிக்கும் நபர். அவரது கதாபாத்திரத்தில் நடிப்பது அருமையான விஷயம். ஏனென்றால், நானும் அவரைப் போலவே இருக்கிறேன்” என்றார்.

விராட் கோலி பயோபிக் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே செய்தி வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours