இதில் பேசிய இயக்குநர் கிருஷ்ணா, “இந்த படத்தை எனக்கு ஆஃபர் பண்ணது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. ஒரு நாள் இந்தப் படத்தை டிராப் பண்ணவேண்டிய சூழல் வந்தது. ரொம்ப நெருக்கடியான நிலைமை. அப்போதான் STR இந்தப் பட ஷூட்டிங்ல இணையப் போற டைம். நான் ரொம்ப நம்பக்கூடிய கடவும் அனுமன். அவரை வேண்டிக்கிட்டு வந்து அமைதியா உட்கார்ந்தேன். பைத்தியம் பிடிச்ச மாதிரி சுத்திட்டு இருந்தேன். அப்பறம் ஒரு பத்து நிமிஷம் ஞானவேல் ராஜா சார் கூட பேசினேன். அந்தப் பத்து நிமிஷத்துக்கு அப்பறம்தான் எல்லாமே நடந்தது. நேஹா ஞானவேல் ராஜாதான் அதற்குக் காரணம். அவங்கதான் என்ன திரும்பப் பேசிப் பார்க்கச் சொன்னாங்க. அனுமனுக்கு ஞானவேல் சாருக்கும் நன்றி” என்றவர், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் படத்தின் நடிகர்கள் பற்றித் தொடர்ந்து பேசினார்.
“ரஹ்மான் சார்கிட்ட நேத்து நைட்டு பரபரப்பா 8 மணிக்கு டிரெய்லருக்காக மியூசிக் கேட்டேன். ரொம்ப அமைதியா எனக்குப் பண்ணிக் கொடுத்தார். அவரைப் பற்றிப் பேசணும்னா பேசிட்டே போகலாம். ரொம்ப பெரிய இன்ஸ்பிரேஷன் அவரு. STR-க்கு எனக்கும் 20 வருஷப் பழக்கம். அவரோட ‘தம்’ படத்துக்கு அப்பறமே நான் அவர்கூட ஒரு படம் பண்ணியிருக்க வேண்டியது. ஆனா, அப்ப பண்ண முடியல.
ஷூட்டிங்குக்கு முதல் நாள் நைட் டயலாக் பேப்பர் வாங்கிட்டு போவாரு. அடுத்த நாள் வந்து தூள் கிளப்பிடுவாரு. எனக்கு முழு சுதந்திரம் தந்தாரு. கௌதம் கார்த்திக்கைத்தான் ரொம்ப கொடுமைப்படுத்தி இருக்கேன். ஒரு புது கௌதம் கார்த்திக்கை நீங்க திரையில பார்ப்பீங்க! பிரியா பவானிசங்கர் ரொம்பவே ஸ்வீட்” என்றார்.
+ There are no comments
Add yours