மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தின் முதல் பாடல் எப்போது வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக எடுத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகிய இந்தப் படத்தின் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. சினிமா ரசிகர்களை மிகவும் கவர்ந்த ‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்படம், 500 கோடிகளை வசூலித்து பல்வேறு சாதனைகளை கோலிவுட் திரையுலகில் படைத்தது. குறிப்பாக அமெரிக்காவில், ரஜினியின் ‘2.0’ படத்தைக் காட்டிலும் ‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்படம் வசூல் சாதனை புரிந்தது.
லைகா மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்த இந்தப் படத்தில், ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷமி, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘அக நக’ என்றப் பாடல் வருகிற 20-ம் தேதி 6 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார்.
Get ready to experience the magic of #AgaNaga in all its glory! 20th March. 6 PM. Stay tuned!
: @ShakthisreeG
: @ilangokrishnan #PS2 #PonniyinSelvan #CholasAreBack #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth @IMAX @PrimeVideoIN pic.twitter.com/jhJ0KLk0Pd— Lyca Productions (@LycaProductions) March 17, 2023
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
+ There are no comments
Add yours