3/17/2023 1:05:55 PM
ஐதராபாத்: ஆர்ஆர்ஆர் படத்தின் 2ம் பாகம் உருவாகும் என இயக்குனர் ராஜமவுலி கூறினார். ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் ரூ.1000 கோடி வசூல் சாதனையும் செய்தது. இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. இது படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் 2ம் பாகத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜமவுலி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறும்போது, ‘ஆஸ்கார் விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எங்களுக்குள் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆர்ஆர்ஆர் படத்தின் 2ம் பாகம் எடுப்போம். அதற்கான பணிகளை வேகமாக தொடங்குவோம்’ என்றார்.
+ There are no comments
Add yours