ஊருக்காக போராட முடிவு எடுக்கும் சித்தார்த்.. கடத்தப்படும் பொம்மி – நினைத்தாலே இனிக்கும் ஸ்பெஷல் எபிசோட் அப்டேட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தாலே இனிக்கும்.
நாளுக்கு நாள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் சித்தார்த் பொம்மிக்காக கிராமத்துக்குச் சென்று கூலி வேலை செய்து கஷ்டப்பட்டு வரும் நிலையில் சித்தார்த்தை காதலிப்பதாக சொல்லி பின்னாடி திரியும் பொன்னி அவர்கள் செட் செய்த ஆள் என பொம்மிக்கு தெரிய வருகிறது.
இப்படியான நிலையில் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் ஒரு மணி நேர ஸ்பெஷல் எபிசோட் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
இந்த ஸ்பெஷல் எபிசோட்டில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது பொன்னி குறித்த உண்மை தெரிந்ததும், பொம்மி இனி இந்த ஊரில் ஒன்று இருந்தால் நான் இருக்க வேண்டும் இல்லையென்றால் சித்தார்த் இருக்க வேண்டும் என கோபப்பட, சித்தார்த் ஊரை விட்டு கிளம்ப முடிவெடுக்கிறான்.
ஊரைவிட்டு கிளம்பும்போது அந்த ஊரில் 25 வருடம் பழமை வாய்ந்த கோவில் ஒன்றில் பிரச்சனை ஏற்படுகிறது. அதாவது லிங்காவாக என்ட்ரி கொடுக்கும் பெசன்ட் ரவி கோவில் சம்பந்தமாக வழக்கு நடந்து கொண்டிருப்பதால் திருவிழா செய்யக் கூடாது என பிரச்சனை செய்து கோவிலுக்கு பூட்டு போடுகிறான். தன்னுடைய அம்மாவின் சென்டிமென்ட்டான கோவில் என்பதால் சித்தார்த்தும் அவனது தாத்தாவும் கோவிலை திறக்க முயற்சி செய்ய லிங்கா தன்னுடன் குஸ்தி போட்டு ஜெயிக்க வேண்டும் என சொல்கிறான்.
இதனால் சித்தார்த் குஸ்தி போட முடிவெடுக்க ஊர்காரர்கள் அவனை பொம்மி வீட்டில் தங்க சொல்லி பொம்மியை பணிவிடை செய்ய சொல்கின்றனர். சித்தார்த் இருப்பது பிடிக்காமல் பொம்மி பரசுராமன் என்ற குஸ்தி மாஸ்டரை வரவைத்து முதலில் அவருடன் குஸ்தி போட்டு ஜெயித்து காட்டு அதன் பிறகு லிங்காவுடன் குஸ்தி போடு என சொல்ல பரசுராமனிடம் தோற்றுப் போகிறான்.
இப்படியான நிலையில் தாத்தா அங்கு வர பிறகு அன்னலட்சுமியின் அண்ணன் தான் பரசுராமன் என்பது தெரிய வருகிறது. அதன் பிறகு பரசுராமன் சித்தார்த்துக்கு குஸ்தி பயிற்சி கொடுக்க லிங்காவுடன் போட்டி நடக்கிறது.
முதல் ரவுண்டில் சித்தார்த் ஜெயிக்க இரண்டாவது ரவுண்டு டிராவில் முடிகிறது. குஸ்தியில் சித்தார்த்தை ஜெயிக்க முடியாது என்பதை தெரிந்து கொள்ளும் லிங்கா பொம்மியை கடத்திவிட்டு அதை வைத்து சித்தார்த்தை தோற்கடிக்க முயற்சி செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப் போவது என்ன? பொம்மியை மீட்டெடுத்து சித்தார்த் ஜெயிப்பானா என்பதுதான் ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷல் எபிசோடில் ஒளிபரப்பாக இருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே நினைத்தாலே இனிக்கும் சீரியல் ஸ்பெஷல் எபிசோட்டை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஞாயிறு மதியம் 1.30 மணிக்கு காண தவறாதீர்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
+ There are no comments
Add yours