நடிகர் தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படம் உலக அளவில் ரூ.118 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியான படம் ‘வாத்தி’. இப்படம் தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரில் வெளியிடபட்டது. இந்தப் படத்தில் பாலமுருகன் எனும் கதாபாத்திரத்தில் ஆசிரியராக தனுஷ் நடித்துள்ளார். மேலும், சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோரும் படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரித்த இப்படம் 8 நாட்களில் ரூ.75 கோடியை வசூலித்ததாக படத்தின் இயக்குநர் அதிகாரபூர்வமாக படத்தின் வெற்றிவிழாவில் தெரிவித்திருந்தார். படம் வெளியாகி இன்றுடன் ஒருமாதம் கடந்த நிலையில் ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவான ‘வாத்தி’ உலக அளவில் ரூ.118 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. படம் இன்று நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours