உத்தவ் தாக்கரே ஆட்சியில் இருந்தபோது கங்கனா வீட்டில் சட்டவிரோத கட்டுமானப்பணி இருப்பதாகக் கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து கங்கனா இப்பிரச்னையை நீதிமன்றம் வரை எடுத்துச்சென்றார். தற்போது மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி இருப்பதால் மீண்டும் தனது வீட்டை கங்கனா புதுப்பித்து கட்டத்தொடங்கியிருக்கிறார்.
அதோடு வீட்டிற்கு வெளியில், `நாய்கள் ஜாக்கிரதை’, `அனுமதியின்றி வராதீர்கள்’ என்றுதான் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்படும். ஆனால் கங்கனா தனது வீட்டிற்கு வெளியில் வைத்திருக்கும் அறிவிப்புப் பலகையை பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அதோடு கங்கனா வீட்டிற்கு அருகில் செல்லவும் பயப்படுகின்றனர். `வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தால் துப்பாக்கியால் சுடப்படுவீர்கள்!’. `துப்பாக்கிச்சூட்டில் தப்பித்தால் மீண்டும் சுடப்படுவீர்கள்!’ என்ற எச்சரிக்கை பலகை வீட்டிற்கு வெளியில் வைக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours