டபுள் ஆக்ஷன் என இறுதியில் ட்விஸ்ட் வைப்பது, மருத்துவத்துறையில் நடக்கும் மோசடியை ஊறுகாய் போலக் கதையில் சேர்த்திருப்பது என வழக்கொழிந்த த்ரில்லர் டெம்ப்ளேட்டுக்குள் திருப்பங்களை நிரப்பி, கதையைக் கொண்டு சென்றிருக்கிறார். இந்தச் சுவாரஸ்யமற்ற காட்சிகளோடு, லாஜிக் ஓட்டைகளும் இணைந்து கொள்வதால், பார்வையாளர்களுக்கு அயற்சி மட்டுமே ஏற்படுகிறது. கதை நிகழும் முக்கிய சாலைகளில் சி.சி.டி.வி கேமரா கூட இருக்காதா என ஒரு பக்கம் கேள்வி எழுந்தால், மறுபக்கம், சில காட்சிகளில் ஆதாரமாகக் காட்டப்படும் சி.சி.டி.வி கேமரா காணொலிகள் மிட், க்ளோஸப், லாங் ஷாட் பல ஆங்கிள்களில் எடுக்கப்பட்டிருப்பது போலக் காட்டப்படுவது என்ன லாஜிக்கோ! அப்படியே அதிலேயே ஆடியோவும் இணைத்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.
உதயநிதியையும் பிரசன்னாவையும் பின்தொடரும் மர்ம நபர் எப்படி அவர்களுக்கு முன்னாலேயே எல்லா இடங்களுக்கும் சென்று கேமராவுடன் தயாராக இருக்கிறார் என்ற கேள்வி, பார்வையாளர்களுக்குக் குழப்பத்தை மட்டுமல்ல சிரிப்பையும் வரவழைக்கிறது. மேலும், சடலத்தை வைத்துக் கொண்டு, இரண்டு சாமானியர்கள் இவ்வளவு அஜாக்கிரதையாக யோசிப்பார்களா என்ற கேள்வி படம் முழுவதுமே நம்மோடு பயணிக்கிறது. பூமிகாவிற்கான பின்கதையும் பல படங்களில் பார்த்த ஒன்றுதான்.
+ There are no comments
Add yours